ஞாயிறு, அக்டோபர் 09, 2011

பத்து வயது குழந்தையாக விழைகிறேன்..

கல்லூரி படிக்கும் எந்த இளவட்டத்தையாவது உங்கள் பொழுது போக்கு என்ன என்று கேட்டால், "Reading books, Browsing, Hearing music" னு சீன் போடுவாங்க. தம்பி, ரெசுமே கு எல்லாம் கேக்கல, பொதுவா சொல்லுப்பா' னா, "படம் பாப்போம், கிரிக்கெட் விளையாடுவோம், தூங்குவோம், போன் கடலை, மெசேஜ் கடலை" னு சொல்வாங்க. இப்ப இருக்கின்ற குழந்தைகளை கேட்டால், "activity note' இல் picture ஒட்டுவோம், Play station இல் விளையாடுவோம், CNN பாப்போம்" னு சொல்வாங்க. நான் 10 வயச இருக்கும் போது எங்க உலகமே வேற. சரியான எடக்குநாட்டான் னு நினைக்காதிங்க. எங்க உலகத்திலயும் Amusement park, Activity book... எல்லாமே இருந்துச்சு.. 

இப்பவெல்லாம் பொம்மை களுக்கு கூட brand name பார்த்து தான் வாங்கறோம். அனால், எங்க brand எப்பவுமே களிமண், மணல் தான். ஆனால், நாங்க பீச் ல பொய் மக்(mug) எல்லாம் வச்சு விளையாண்ட தில்லை. கொட்டாங்குச்சி, பிளாஸ்டிக் டம்ளர் வச்சு இட்லி சுட்டிருக்கிறோம், அதில் கோவைப் பழங்கள், மணத்தக்காளி பழங்கள் வைத்து ரசனையோடு பரிமாறி உள்ளோம். 


நெல் வயல் சேற்று மண்ணைப் பதப்படுத்தி, பிசைந்து, அம்மி, செக்கு, அண்டா, குண்டா என எல்லாமே செய்வோம். சட்டை எல்லாம் சேறு குழப்பி, கை கால் எல்லாம் மண் படிந்து, 'கோவேறு கழுதை' என திட்டு வாங்கிய காலமெல்லாம்,  'Short-term memory loss' வந்த கூட மறக்காது.

இந்த செற்றைஎல்லாம் மோட்டார் தண்ணியில் கழுவி, ஒரு அரை மணி நேரம் ஆட்டம் போட்டு விட்டு கிணற்றில் குதிப்போம். அங்க தான் எங்க ஊரு வாண்டுகள் கூடமே இருக்கும். சுரை புருடை, கயிறு கட்டி பழகு கின்ற கூட்டம், புதுசா நீச்சல் கத்துக்கிட்டு ஒரு ஓரமா நீச்சல் அடிக்கின்ற ஒரு கூட்டம், ஒரு சில எக்ஸ்பேர்ட்ஸ் உயரமான இடத்திற்கு பொய் சாகசம் எல்லாம் பண்ணி வித்தை காட்டுவாங்க. கிட்டதட்ட 2 மணி நேரம், உடம்பெல்லாம் வெளுத்து, விறைத்துப் பொய், கினத்துக்கரர் வந்து திட்டவும், கூட்டம் கலைந்து விடும். வீட்டுக்கு பொய் பழைய சோறில் மோர் கரைத்து வெங்காயம் கடித்து 2-3 டம்ளர்  குடிச்சிட்டு ஆசுவாசமா கட்டில்'ல படுத்துட்டு கொஞ்ச நேரம் டிவி பாப்போம். டிவி னா CNN, Disney லாம் இல்லைங்க, DD1 ல புரியாத பாஷை ல ஏதோ நாடகம் போட்ருப்பான், அதை ஒரு அரை மணி நேரம். அதுக்குள்ள எங்க செக்கு, அம்மி எல்லாம் காய்ந்துருக்கும். அதை எல்லாம் மளிகை சாமான் வாங்கும் அட்டை பெட்டியில் போட்டு பத்திரபடுத்தி விட்டு, அதுக்கு மேல் ஒரு பழைய சாக்கை போட்டு, எவருக்கும் சந்தேகம் வராத படி , நைசாக நழுவி விடுவோம். 

பின், தென்னந் தோப்பிலோ, அல்லது ம மாற நிழலிலோ கட்டில் போட்டு பழைய நோட்டு, கதை புத்தகங்கள், கொண்டு பொய், சிவப்பு பேனாவில், டிக் போட்டு விளையாடுவோம், அதுவும் மிஸ் மாதிரி கையெழுத்து எல்லாம் போட்டு பாப்போம். அதுவும் போர் அடிச்ச, இலையை காய வச்சு, பழைய சோறு போட்டு நோட் ல ஒட்டி கலர் கலர் ஆ கோலம் போட்டு வச்சுப்போம். வீட்டுக்கு வரும் லெட்டர் இன் ஸ்டாம்ப், கடலை மிட்டாயில் வரும் சாமி படம், ஆசை மிட்டாய் காகிதம், பென்சில் சீவி வர இறகு, கோழி இறக்கை, ஐஸ் கிரீம் குச்சி, செய்தித்தாள் நிகழ்வுகள் னு ஏகப்பட்ட activities செய்வோம். அதையெல்லாம் ஸ்கூல் பிரின்சிபால் கிட்ட காட்டி குட் வாங்குறதுல அவ்ளோ சந்தோசம் !!!


சிறுவர் மலர் புத்தகத்தில் வரும் செய்து பாருங்கள் எல்லாம் செஞ்சு பார்த்து வீட்டில் அங்கங்கே ஒட்டி திட்டு வாங்குவ தெல்லாம் நினைத்தால் இன்னும் சிறு பிள்ளை யை மாறிடத் தோனும். 

தென்னங்கீற்றில் கடிகாரம் செய்து கடிக்கிறது, இளநீர் ல பப்பாளி தண்டு போட்டு உறிஞ்சுவது, நுங்கு சாப்பிட்டு விட்டு அதில் வண்டி செய்து ஓடுவது, டியர் இல் தூரி கட்டி விளையாடுவது.. இப்படி நான் அனுபவிச்ச விஷயங்கள் எத்தனை எத்தனையோ..

7 கருத்துகள்:

  1. வெயிலோடு விளையாடி
    வெயிலோடு உறவாடி
    வெயிலோடு மல்லு கட்டி
    ஆட்டம் போட்டோமே,
    நினைவா?

    பதிலளிநீக்கு
  2. ரசிச்சு ரசிச்சு எழுதி இருக்க டீ...
    எனக்கு எல்லாமே புதுசா இருக்கு!

    பதிலளிநீக்கு
  3. @SuryaJeeva எங்கள் ஊர் பக்கம் அவளவு வெயில் இல்லை என்றாலும், கொஞ்சம் வெயிலோடு, நிறைய மண்ணோடு விளையாடி, உறவாடி ஆட்டம் போட்டோம்.. :) தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..

    @Yuvarani இந்த புது உலகத்தை உனக்கு அறிமுகம் செய்யவே எங்கள் ஊருக்கு உன்னை அழைத்துக்கொண்டு தான் இருக்கிறேன்.. இந்த முறை நிச்சயம் வருவாய் என நம்புகிறேன்..

    பதிலளிநீக்கு
  4. என்னங்க அப்படியே என்னை சிறு வயசுக்கு அழைச்சுட்டு போயிட்டீங்க... இதுல எல்லாத்தையும் நான் சிறுவயதில் விளையாடிருக்கேன்... கிணறு மட்டுந்தான் பெருசாகி நீச்சல் கத்துக்கிட்டேன்.. நீங்க சொன்ன மாதிரி சார்ட் டெர்ம் மெமரி லாஸ் வந்தா கூட அந்த கனாகாலத்த மறக்க முடியாது.... ஈகோ பாக்காம பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. @மாயஉலகம் மிக்க நன்றிங்க..

    பதிலளிநீக்கு
  6. மிகவும் ரசிச்சேன்.

    வேர்ட் வெரிபிகேசனை எடுத்திடுங்க.கமென்ட் போட கஷ்டமா இருக்கு.

    பதிலளிநீக்கு
  7. ச்சே.... சான்ஸ் லெஸ் ரைட்டிங் மா!

    பதிலளிநீக்கு