திங்கள், ஜூலை 25, 2011

என் ஆசைகளை அசைபோடுகிறேன் ..


ஒவ்வொருதற்கும் ஆசைகள், கனவுகள் நிறைய இருக்கு.. ஆசைகளுக்கும் கனவுகளுக்கும் ரொம்ப தூரம் வித்தியாசம் இருக்கு. ஏணி வைத்தால் கூட எட்ட முடியாத உயரம். உதாரணத்துக்கு, குழந்தைகளை வைத்து பேசுவோம். இன்றைய குழந்தைகளுடைய ஆசைகள் சட்டுன்னு நிறைவேறிவிடும். ஆனால், கனவுகள்??? தொடர்ந்துட்டு தான் இருக்கு. எதுவரைக்கும்?? அது அவங்களுக்கே தெரியாது..


ஒரு குழந்தை கிடார் கத்துக்கணும் னு சொன்னா ஏத்துக்கற பெற்றோர்கள், தான் கிடாரிஸ்ட் ஆகணும் னு சொன்னா ஏத்துக்கறதில்லை. இங்க தான் ஒவ்வொருத்தரோட கனவுகள் சிதைக்கக்கபடுகிறது. ஆனாலும் அந்தக்கனவுகள் அடி மனசின் ஆழத்தில் புதைந்து போய்விடும் . 



அந்த புதைந்து போன கனவுகளின் விளைவுகள் இப்படி தான் இருக்கும், 
  • சில கனவுகள் மக்கி வேறு சில ஆசைகளுக்கு உரமாகலாம்.
  • சில கனவுகள் இறுகி போய் மதிப்புள்ள வைரமாய் மாறலாம்.
  • சில கனவுகள் பிளாஸ்டிக் மாதிரி, தானும் அழியாம மற்ற கனவுகளையும் செழிக்க விடாமல் செய்யும். 

என்னோட கனவுகள் முதல் இரு விளைவுகளையும் சந்தித்தது. என்னோட கனவுகள் ல மிக முக்கியமானது, பத்திரிகையாளர் ஆகணும்கிறது. ஆனாலும், வேற யாருக்காகவும் இல்லாமல், சூழ்நிலை, சுதந்திரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, என் ஆசைகளை மனதினுள் புதைத்து விட்டு, M .C .A ., படிக்கிறேன். ஆனாலும் என் கனவு உரமாகி என்னை வலுவாக்கியது. 
 
நான் கணினித் துறையில் இருப்பதால், என் துறை சார்ந்த ஊடகப்பணிகளில் பங்கு பெறுவேன். வலைப்பூ வில் கவிதை கள் மட்டுமே இட்டு வந்த எனக்கு, எதோ ஒரு விஷயம் உந்து சக்தியா இருந்து கருத்துகளையும் பரிமாற வச்சிருக்கு. சில சமயங்களில் பல விஷயங்கள் என்னையும் ஒரு பத்திரிகையாளரா உணர வச்சிருக்கு. அந்த விஷயங்களை இனி எல்லோரிடமும் பரிமாறலாம் னு இருக்கேன். புதைந்து போன ஆசைகள் ஒவ்வொன்றையும் தட்டி எழுப்புங்கள். இனி, இது நம்ம உலகம். பூக்கள் பூத்து குலுங்கட் டுமே.. !!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக